தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலினிடம், பொதுமக்கள் மனு அளித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தமிழகத்துக்கு குண்டூசி அளவுகூட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்மைகள் செய்யவில்லை என விமர்சித்தார். 2017-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இதுவரை தொடங்கப்படாதது ஏன்?, என அவர் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், ஏழுபேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம், காவிரி ஆணைய விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் குறித்து, மத்திய அரசிடம் முதலமைச்சர் வலியுறுத்த தவறிவிட்டதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினர்.