கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகள் குறித்து அதிமுக முடிவு செய்யும், என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, மீண்டும் தமிழகம் வர இருப்பதாகவும், வரும் 25-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள விழாவில் அவர் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார். வரும் 19-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வர இருக்கிறார் எனவும், வரும் 21-ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக கூட்டணியில், அதிமுக முக்கிய கட்சி என்பதால், கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகள் குறித்து அதிமுகவே முடிவு செய்யும் என மாநில பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி குறிப்பிட்டார்.