தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் புறப்பட்டார். லண்டண் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மறுமுனையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பருமான அஜித்குமார் லண்டனில் கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் மைதானத்தில் ரேஸர் அஜித்குமார் கலந்துகொள்ளும் கார் பந்தையத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட உள்ளதாக கூறப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித், விஜய் ஆகியோர் சந்திக்க உள்ளதால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இந்த நிலையில் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் நடிகர் மற்றும் ரேஸர் அஜித்தை கண்டதும் ஓடி வந்து ஆரத்தழுவி கட்டியணைத்து அன்பை பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.




