முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

’நான் தீவிர ரஜினி ரசிகன் பாஸ்’- அதிரடி வெங்கடேஷ் ஐயர் ஆஹா பேட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகி இருக்கிறார் வெங்க டேஷ் ஐயர். அவர் பேட்டிங் அதிரடி பார்த்து, மொத்த கிரிக்கெட் உலகமும் ’எங்கய்யா இருந்தான் இந்த பையன்?’ என்று பேச ஆரம்பித்திருக்கிறது.

’அவர் பேட்டிங்ல கொஞ்சம் யுவராஜ் சிங் சாயல் இருக்குல்ல’ என்றும், ’ச்சே ச்சே இவர் வேற லெவல்’ என்றும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர் இன்னும் உச்சம் தொட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் முன்னாள் வீரர்கள்.

இந்த வெங்கடேஷ் ஐயர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவர் பெற்றோர் தமிழகத்தில் இருந்து அங்கு சென்றவர்கள் என்கிறார்கள்.

‘நான் நல்லா படிக்கிற பையன். பொதுவாவே தென்னிந்திய குடும்பங்கள், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கிறதுல குறியா இருப்பாங்க. எங்க வீட்டுலயும் அப்படித்தான். இருந்தாலும் நான் அதிகமாக கிரிக்கெட்ல கவனம் செலுத்த என் அம்மா காரணமா இருந்தாங்க’ என்கிறார் வெங்கடேஷ்.

பிறகு மத்திய பிரதேச அணிக்காக டி-20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவரை சீனியர் அணிக்கு தேர்வு செய்தார்கள். பிறகு 23 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் வெங்கடேஷ். அடுத்து தேடி வந்தது, மத்திய பிரதேச மாநில முதல்தர கிரிக்கெட் வாய்ப்பு.

’கிரிக்கெட்டை தொடர்ந்துட்டே இருந்தேன். பி.காம் படிச்சுட்டே, சி.ஏ.சேர்ந்தேன். 2016 ஆம் வருஷம் இன்டர்மீடியட் பாஸ் பண்ணின பிறகு விளையாட்டை ஓரங்கட்டிட்டு சி.ஏவை முடிக்க நினைச்சேன். குறைந்த பட்சம் தற்காலிகமாவது கிரிக்கெட்டை தள்ளி வைப்போம் னு யோசிச்சேன். பிறகு சி.ஏவை விட்டுட்டு எம்.பி.ஏ படிக்க நினைச்சேன். நிறைய நுழைவு தேர்வுகளுக்கு போனேன். ஒரு நல்ல காலேஜ்ல சேர்ந்தேன். ஆசிரியர்கள், என் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்து ஊக்கப்படுத்தினாங்க. நான் நல்லா படிக்கிறவன் கறதால அவங்க ளுக்கும் பிரச்னை இல்லை. இங்க இருந்து என் கிரிக்கெட் கேரியர் தொடங்குச்சு’ என்கிறார் வெங்கடேஷ் ஐயர்.

பிறகு மத்திய பிரதேச ரஞ்சி அணியில் இடம் கிடைத்ததும் வெங்கடேஷ் தனது திறமையை நிரூபிக்கத் தொடங்கினார். 2020-21 சையது முஷ்டாக் அலி டிராபிக்கான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தியதும் அடுத்து விஜய் ஹசாரே தொடர். இதில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 146 பந்தில் 198 ரன்கள் விளாசியதும் கவனிக்கப் பட்டார் வெங்கடேஷ் ஐயர்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வானதும் அங்கு டாப் கிளாஸ் வீரர்களுடன் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என மகிழ்ந்தார். ஆனால், முதலில் அவரை கண்டுகொள்ளாத அணி, இப்போது அவருக்கு ஓபனிங் வாய்ப்பை கொடுக்க, ரணகளப் படுத்திக் கொண்டிருக்கிறார், இந்த ஐயர்.

விளையாட்டைத் தவிர, புத்தகங்கள் வாசிப்பது, சினிமா பார்ப்பது இவரின் மற்ற விருப்பங் கள். நான் தலைவர் (ரஜினிகாந்த்) பக்தன் பாஸ். அவர் ஒரு லெஜண்ட். அவர் படம்னா பல முறை பார்ப்பேன். அவரோட படையப்பா பன்ச்-தான் எனக்கு பிடிச்ச லைன், அது, என் வழி தனிவழி’ என்கிறார் வெங்கடேஷ் ஐயர்.

 

Advertisement:
SHARE

Related posts

அமேசானில் மாட்டு சாணம் ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்: சுவை குறித்து சொன்ன சுவாரஸ்ய ரிவியூவ்!

Saravana

10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Halley karthi

டெல்லி: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கத் தடை 

Ezhilarasan