தவறாக முடி வெட்டிய பிரபல மாடலுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தேசிய நுகர் வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல மாடல் ஒருவர், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருக்கும் சலூனுக்கு சிகை அலங்காரம் செய்ய சென்றார். அவர் சிகை அலங்கார நிபுணரிடம், இப்படி இப்படி முடியை வெட்ட வேண்டும் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அவர் சொன்னபடி முடியை வெட்டாமல், குறைவாக வெட்டிவிட்டாராம். இத னால் அதிர்ச்சியடைந்த அவர் sமன உளைச்சலுக்கு ஆளானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரபல டாப் நிறுவன ஷாம்பூ விளம்பரங்களில் நடித்துள்ள அவருக்கு சினிமாவில் நடிக்க வும் வாய்ப்பு வந்துள்ளது. பிறகு அவருக்கு ஹேர் ட்ரீட்மென்ட் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சரியாக செய்யப்படாததால், அவர் தலைமுடி எரிந்ததாம். அலர்ஜி உள்ளிட்ட பிரச்னை களும் ஏற்பட்டுள்ளது. தவறான சிகிச்சை காரணமாக கிட்டத்தட்ட மொத்தமாக முடியை இழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை, விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். விளம்பர வாய்ப்புகளையும் இழந்தாராம். இதையடுத்து அந்த சலூன் மீது நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
விசாரித்த ஆணையம், தவறான சிகிச்சை காரணம் அந்த மாடல், எதிர்பார்த்த வாய்ப்பு களை இழந்துள்ளார். இது அவருடைய வாழ்க்கை முறையை, முற்றிலும் மாற்றி விட்டது. பெரிய மாடலாகும் கனவையும் சிதைத்துவிட்டது. அதனால் அவருக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.