’போதை ஜிகாத்’ குறித்து கிறிஸ்தவ மதத் தலைவர்களை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும் என்று நடிகரும் பாஜக மாநிலங்களவை எம்.பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பிஷப் ஜோசப் கல்லரங்காட் (Joseph Kallarangatt), கடந்த சில நாட் களுக்கு முன் விழா ஒன்றில் பேசும்போது பரபரப்பு புகார் ஒன்றைக் கூறினார். கிறிஸ்தவ இளைஞர்களையும் இளம்பெண்களையும் திட்டமிட்டு ‘லவ் ஜிகாத்’, ‘போதை ஜிகாத்’ மூலம் வீழ்த்தி மதமாற்றம் செய்வதாக புகார் கூறியிருந்தார். இது கேரளாவில் பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசு பேச வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன. ஆனால், அதை மாநில அரசு நிராகரித்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், பிஷப் ஜோசப் கல்லரங் காட்டை சுரேஷ் கோபி சந்தித்துப் பேசினார். அவருக்கு தனது ஆதரவை அவர் தெரிவித் தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, ‘பிஷப் ஜோசப் கல்லரங் காட் கூறும் குற்றச்சாட்டு குறித்து மாநில அரசு ஆராய வேண்டும். ’லவ் ஜிகாத்’ தொடர்பாக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய அவர்களை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும்’ என்று கூறினார்.
சுரேஷ் கோபி, தமிழில் அஜித்தின் தினா, ஷங்கர் இயக்கிய ஐ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.








