முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பிரதமர் வேட்பாளர் யார் ? – மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்

யார் பிரதமர் வேட்பாளர் என்பது முக்கியமல்ல ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் சேர்ந்து செயல்படுதே முக்கியம் என அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நந்தனம்  ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. திமுக வின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதனையும் படியுங்கள்: முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!

அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது..

”நவீன தமிழ்நாட்டிற்கான அடிக்கல்லை மு.க.ஸ்டாலின் நாட்டி வருகிறார். நாங்கள் கருத்தியல் ரீதியாக உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் – திமுக கூட்டணி நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. நமது கூட்டணி 2024 மக்களவை தேர்தலிலும் கூட்டணி தொடரும்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பேரணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக பிரிவினையை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுகிறது. திமுக – காங்கிரஸ் இணைந்து தமிழ்நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு பணியாற்றுவோம்.

இதனையும் படியுங்கள்: மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது – அகிலேஷ் யாதவ் புகழாரம்

பாஜக விற்கு எதிரான அணியில் யார் பிரதமராவார்?, யார் தலைமை ஏற்பார்கள் என்பது கேள்வியல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்” என மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது..

எங்கள் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பிறந்த நாளும் இன்றுதான். சமூக நீதி குறித்து இங்கிருந்து வட இந்திய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பை திமுக உருவாக்குவதைப் போன்று, பீஹாரிலும் பணியாற்றி வருகிறோம். மு.க.ஸ்டாலின்  70 வயதானவர் மாதிரி இல்லை, இளமையாக தோற்றமளிக்கிறார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்”  என தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இடா புயல் தாக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

G SaravanaKumar

முதல் ஒமிக்ரான் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்பினர்

G SaravanaKumar

தங்கத்தின் இறக்குமதி விலையைக் குறைத்தது மத்திய அரசு

Web Editor