தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான அச்சன்கோவிலில்காட்டு யானை ஒன்று ஊருக்குள் உலா வந்து அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் அங்கும் இங்கும் ஆக உலா வந்த யானையைப் பொதுமக்கள் செல்போனில் சார்ஜ் லைட் அடித்தவாறு கூச்சலிட்டு ஒன்றுக் கூடி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் யானையானது ஊருக்குள் இருந்து வனப்பகுதிக்குச் சென்றது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் புகாத வண்ணம் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் தேவைக்காக ஊருக்குள் யானைக் கூட்டங்கள் வந்திருக்க வாய்ப்பு அதிகம் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.கா.ரூபி