யார் கூட்டுகளவாணி? – அதிமுகவிற்கு, தவெக ஐடி விங் பதிலடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கட்சி நடக்கிறதா? கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.

திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.

கொடநாடு கொலைவழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடி.

கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.