டெல்லியில் காற்று மாசு தீவிரமாக நிலவும் நிலையில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய 2 நாட்களில் டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. இதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களுக்குப் பின், நவம்பர் 9 முதல் பட்டாசு வெடிப்பதற்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வரும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகள், நல்வாழ்வு மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் அமைதி மண்டலங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சுற்றியுள்ள 300 மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




