முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

யார் அந்த அடுத்த சூப்பர் ஸ்டார்?

தற்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் இரு பெரிய நட்சத்திரங்களான நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் பல நட்சத்திரங்கள் உள்ளனர்.

ரஜினி, கமல், முதல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என HEROக்கள் பட்டாளம் நீண்டுக்கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் நயந்தாரா முதல் தற்பொழுது லவ் டுடே திரைப்படத்தில் நடித்த இவானா வரை இன்னொரு பக்கம் நட்சத்திர பட்டாளம் நீண்டு
கொண்டே இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்கள் ஒரு பக்கம் மாஸ் காட்டிகொண்டு இருக்க, சைலண்ட்டாக ஒரு நட்சத்திரம் மாஸ் காட்டிகொண்டு நம்மிடம் வரபோகிறது, அது என்ன நட்சத்திரம்? C/2022 E3 (ZTF) எனப்படும் வால் நட்சத்திரம் கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் Zwicky Transient Facility எனப்படும் wide angle ஆய்வு கேமராவைப் பயன்படுத்தி
விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து நீண்ட காலமாக இந்த வால்மீன் பிரகாசமாக தெரிகிறது. இந்த வால்மீன் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னதாக பூமியை கடந்தது. அதாவது, பேலியோலிதிக் காலத்தில் நமது பூமி பனிப்ரதேசமாக இருந்த காலத்தில், நியாண்டர்டால்கள் கிரகத்தை சுற்றித் திரிந்த காலமான ஆரம்பகால ஹோமோ சேபியன்கள் இருந்த காலத்தில் கடைசியாக பூமிக்கு மேலே வானத்தில் வந்தது.

50,000 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வரும் இந்த வால் நட்சத்திரமானது பிப்ரவரி 1ஆம் தேதி பூமியை கடக்கும் என கூறப்படுகிறது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பொழுது எவ்வாறு வெளிச்சமாக இருந்ததோ, அதே வெளிச்சத்திலேயே இருந்தால், சூரியன் அஸ்தமித்து வானம் இருண்ட பிறகு இதனை பைனாக்குலர் அல்லது வெரும் கண்களாலேயே காண முடியும். இப்பொழுது இதனை காண தவர விட்டால் அடுத்த 50 வருடம் கழித்தே காணமுடியும்.

எனவே, இந்த நட்சத்திரத்தை தவர விடாமல், நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் வரும் ரேனே போல இந்த வால் நட்சத்திரத்தை கண்டு உங்கள் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

-ஆண்ட்ரூ , நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா: பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

Halley Karthik

மத்திய  அரசுக்கு எதிராக தமிழக பேரவை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற வாய்ப்பு

EZHILARASAN D

சென்னை மேயர் பிரியாவின் போட்டோவை பயன்படுத்தி மோசடி முயற்சி

Web Editor