தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் திரிபாதியின் பதவிக்காலம் ஜீன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால் அடுத்த டிஜிபியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக டிஜிபியாக திரிபாதியின் பதவிக்காலம் வரும் ஜீன் மாதத்தோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் பணிமூப்பின் அடிப்படையில் அடுத்த டிஜிபியாக சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில்குமார் சிங், கந்தசாமி உள்ளிட்டவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு தேர்வு செய்யும் 5 பேரின் பெயர்கள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். இதில் மூவரைத் தேர்வு செய்து, உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்குத் திரும்பி அனுப்பும். இந்த மூவரில் ஒருவரைத் தமிழக அரசு தேர்வு செய்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பும். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால், அவர் அடுத்த டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார்.







