இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

கொரோனா 2வது அலையால் கடுமையான சூழலில் உள்ள இந்திய மக்களுக்கு, உலக நாடுகள் உதவ வேண்டும் என ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின்…

கொரோனா 2வது அலையால் கடுமையான சூழலில் உள்ள இந்திய மக்களுக்கு, உலக நாடுகள் உதவ வேண்டும் என ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், உலகளாவிய தொற்றுநோய்க்கு ஒரு உலகளாவிய முயற்சி தேவைப்படுகிறது என கூறினார். மேலும், இங்கிலாந்து-இந்தியா இடையேயான வர்த்தக உடன்படிக்கை, பொருளாதார ஏற்றத்திற்கு வழி வகுக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், இந்தியாவின் ஆக்சிஜன், ரெம்ட்சிவிர் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.