முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் சினிமா

வந்தியத்தேவனின் FaceBook பக்கத்தை முடக்கிய ஹேக்கர்ஸ் யார் ?

“வந்தியத்தேவனின் Face Book பக்கத்தை முடக்கிய ஹேக்கர்ஸ் யார்?  விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்கள் ஹிட் அடித்து உள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் கார்த்தி, தற்போது ராஜூமுருகன் இயக்கத்தில் “ஜப்பான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சினிமாவை போல் சமூக வலைத்தள பக்கத்திலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்தி.

சமூக கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார் கார்த்தி. இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இது அறிந்து அதிர்ச்சியடைந்த கார்த்தி, தன்னுடைய பேஸ்புக் பக்கம் முடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அவரது ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ கேம் விளையாடுவதை வீடியோ எடுத்து நேரலை செய்யப்பட்டு வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பிப்போனார்கள். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள கார்த்தி,”தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனைச் சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும்” கூறினார்.

யார் பேஸ்புக் பக்கத்தை முடக்கியது என்பது தொடர்பாகக் கண்டறிய சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளிக்க நடிகர் கார்த்தி தரப்பில் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் மூலமாகவோ அல்லது காவல் ஆணையர் அலுவலகத்திலோ புகார் அளிக்கப்பட்ட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை 3.9 மில்லியன் நபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அதே போல கார்த்தியின் டிவிட்டர் பக்கத்தை 2.8 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார்  நடிகர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களை அடிக்கடி சிலர் ஹேக் செய்து வருவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடுப்பதில்லை. பிரபலங்களாக இருந்தாலும் சமூக வலைத்தளப் பக்கங்கள் பாதுகாப்பற்றதாகத் தான் உள்ளது என்கின்றனர் சைபர் வல்லுநர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’மகன் நினைப்பில் ஷாருக் ஒழுங்கா சாப்பிட்டாரான்னே தெரியல..’ வழக்கறிஞர் பேட்டி

Halley Karthik

விஞ்ஞான ரீதியாக ஏமாற்றும் தலைவர் மு.க.ஸ்டாலின்- இபிஎஸ்

EZHILARASAN D

திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து ஓய்வு

G SaravanaKumar