காட்டுமன்னார்கோவில் அருகே சாட்டையடி திருவிழா.! 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…

காட்டுமன்னார்கோவில் அருகே மாசி மக திருவிழாவை ஒட்டி சாட்டையடி திருவிழா நடைபெற்றது.  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஸ்ரீவடபத்ர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி மக திருவிழாவானது வெகு விமர்சையாக…

காட்டுமன்னார்கோவில் அருகே மாசி மக திருவிழாவை ஒட்டி சாட்டையடி திருவிழா நடைபெற்றது. 



கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஸ்ரீவடபத்ர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி மக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இத் திருவிழாவை ஊராட்சி மன்ற தலைவர் சுதா மணிரத்னம் நடத்தி வைத்தார். பின்னர் இதை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கன்னியம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வழிபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து இவ் விழாவின் முக்கிய நிகழ்வான சாட்டையடி திருவிழா நடைபெற்றது. விழாவில் வேண்டுதல் நிறைவேற வேண்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாட்டையால் அடி வாங்கி அம்மனை தரிசனம் செய்து வந்தனர். 

சாட்டையடி திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சாட்டையால் அடி வாங்கி சென்றனர். 

—கோ. சிவசங்கரன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.