தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருத்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசிமக திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறும் அதே போல் இந்தாண்டும் மாசிமக திருத்தேரோட்டத்திற்காக இன்று தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தீர்த்தகிரீஸ்வரரும், சிவகாமியம்மையாரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து கோயில் வலம் வந்தனர்.
இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 5-ம் நாள் வெள்ளி கிழமை தீர்த்தகிரி ஈஸ்வரர், வடிவாம்பிகை திருக்கல்யாண உற்சவம் , ஏழாவது நாள் ஞாயிற்று கிழமை திருத்தேர் உற்சவம் நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அன்று விநாயகர், அம்மன், வடிவாம்பிகை மூன்று தேர் உற்சவம் ஒரே நாளில் நடைபெறுகிறது. இது தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் தேர் திருவிழாவுக்கு வந்து பார்த்து சாமி தரிசனம் பெற்று செல்வார்கள்.
– அனகா காளமேகன்