ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்குபெற உள்ள 20 அணிகள் எவை? பட்டியல் இதோ!

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்குபெற உள்ள 20 அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல்…

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்குபெற உள்ள 20 அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30-ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் நேரடியாகவும், 2022-ம் டி20 உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இவற்றுடன் 2022-ம் ஆண்டு நவம்பர் 14 தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளும் என 12 அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மீதம் உள்ள 8 அணிகள் தகுதி சுற்று வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா,உகாண்டா  ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.

இதன்படி, டி 20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள அண்களின் பட்டியல் வருமாறு:

  • வெஸ்ட் இண்டீஸ்
  • ஆஸ்திரேலியா
  • இங்கிலாந்து
  • இந்தியா
  • பங்களாதேஷ்
  • நீயூசிலாந்து
  • பாகிஸ்தான்
  • தென் ஆப்பிரிக்கா
  • இலங்கை
  • ஆப்கானிஸ்தான்
  • அமெரிக்கா
  • நெதர்லாந்து
  • அயர்லாந்து
  • ஸ்காட்லாந்து
  • பப்புவா நியூ கினியா
  • கனடா
  • நேபாளம்
  • ஓமன்
  • நமீபியா
  • உகாண்டா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.