தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தந்திருந்தார். அப்போது வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார்.
சிலை திறப்பில் கலந்து கொண்ட முதலமைச்சர் பேசதியதாவது,
தவறை செய்தவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், இது கூட்டணி கட்சியை திருப்திபடுத்துவதற்கு அல்ல, செய்த தவறை உணர்ந்து திருந்தாவிட்டால் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற செய்திருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை இன்று கூறியிருக்கிறேன் , இன்னும் 6 மாதத்தில் பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் எனப்பேசிய அவர்,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 300 திமுக மூத்த பிரமுகர்களுக்குபொற்கிளி வழங்கிய முதலமைச்சர், தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பாக திமுக கொடியை ஏற்றி வைத்தார்.







