அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர் புரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவரிடம் அரவேலை வாங்கித் தருவதாக கூறி, ரேணுகா, மோகன்ராஜ், காந்தி உள்ளிட்ட 4 பேரும் பணத்தை பெற்றிருக்கின்றனர். பின்னர் அவர்கள் கொடுத்த பணி நியமன ஆணையை எடுத்துக் கொண்டு கல்விதுறையில் வேலைக்கு சென்றபோது அது போலி என்பதும், அவர்கள் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து, அமுதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்திருந்த புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர், ரேணுகா என்பவர், தான் கல்வித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பது போல போலியான அடையாள அட்டை வைத்திருந்தது தெரிந்தது.

அவரது பிற கூட்டாளிகளும் போலியான அடையாள அட்டை வைத்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ரேணுகா தலைமையிலான கும்பல் 100 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதும் தெரியவந்தது. ரேணுகா உட்பட மோசடியில் ஈடுபட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.







