குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை (Easterly waves) நிலவுகிறது. இதனால், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தமிழ் நாட்டில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், நாகை, ராணிப்பேட்டை, திருவாரூ, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







