மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘பேட்ரியாட்’. மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார் . ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாராவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.








