சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, காஞ்சிபுரம், அரியலூர், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




