இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில்  ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.