நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’பைசன்’. இப்படத்தில் துருவிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்ஜித்தின் நீலம் புரெடக்ஷன் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் ‘தீக்கொளுத்தி’, ‘சீனிக்கல்லு’,‘றெக்க றெக்க’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ள ‘தென்னாடு’ எனும் புதிய பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.







