கடலோர கர்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக சுமார் 3.1 & 4.6 கிமீ உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ் நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிவரை தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.




