பிஜியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.4 ஆக பதிவு…!

பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு பிஜி. மிகவும் சுறுசுறுப்பான புவித்தட்டு மண்டலமான பசிபிக் “நெருப்பு வளையத்தில்” பிஜி அமைந்துள்ளதால், அங்குஅடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன .

இந்த நிலையில் இன்று பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்க வில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.