காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நேற்று முன்தினம் (14-11-2026) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை (15-11-2026) 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் (16-11-2026) அன்று புயலாக(Cyclonic Storm) நிலவுக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் (17-11-2026) அன்று தீவிர புயலாக(Severe Cyclonic Storm) நிலவுக்கூடும். இது அடுத்த இரண்டு தினங்களில் மேலும் வலுப்பெற்று வட-மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

சுமார் 1.5 கிமீ உயரம் வரை தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 3.1 கிமீ உயரம் வரை கேரளக் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.