2வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனிடையே நேற்று அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 356 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் சரிந்ததால், 44.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் பறிபோனது. இதனால் 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிப் பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரன்கள் அடிப்படையில் இங்கிலாந்து பெற்ற 3-வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 18-ஆம் தேதி ஹோபர்ட்டில் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.