“எங்கே செல்லும் இந்தப் பாதை..” – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ரூ.74 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.70 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து ரூ. 9,290-க்கும் சவரனுக்கு ரூ. 2,200-க்கு உயர்ந்து ரூ. 74,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.