‘யோவ் வாய்க்கா எங்கய்யா’ ? வடிவேலு பாணியில் புகார் அளித்த கிராம மக்கள்!!

குமாரபாளையம் அருகே திரைப்பட பாணியில் வாய்க்காலை காணவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை…

குமாரபாளையம் அருகே திரைப்பட பாணியில் வாய்க்காலை காணவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் விவசாய நிலங்களுக்கு இடையே வீட்டுமனைகளை பிரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் சுமார் 300 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் உள்ளன.

இந்த வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் விவசாய நிலங்களுக்கு செல்லும் மேட்டூர் கிழக்குக்கரை பாசன வாய்க்காலில் திறந்து விடப்படும் என்ற ஊராட்சிமன்ற தலைவர் அறிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், ஊராட்சிமன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், 300 ஏக்கர் நிலப்பரப்புடைய கிழக்குக்கரை பாசன கால்வாயை காணவில்லை எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.