எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது பதவி விலகிவிடுவேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி

நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நான் என் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.…

நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நான் என் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இன்று காலை மண்டபம் அருகே மரைக்காயர் பட்டணம் பகுதியில் உள்ள கேந்திரிய  வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நம் நாட்டில் விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மனதை ஒருங்கிணைத்து எதிர்கால சிந்தனையை செயல்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் குறிப்பாக 9வகுப்பு மேல் கவனமுடனும், திறன்பட உழைக்க வேண்டும். ஒவ்வொரு நேரத்தையையும் பயனுர பயன்படுத்த வேண்டும்.

மொபைல் போன்ற பொழுதுபோக்கான விசயங்களில் தனது கவனத்தை திருப்பாமல் மனதை ஒருங்கிணைத்து பாடுபட்டால் நீங்கள் நினைத்தபடி கலெக்டராகவோ, மருத்துவராகவோ, பொறியாளரகவோ, வழக்கறிஞராகவோ, தொழில் அதிபராகவோ திறம்பட ஆகலாம் என மாணவ, மாணவிகளிடம் தெரிவித்தார். மாணவர்கள் மனதை ஒருமுகபடுத்த யோகாசனம் செய்யுங்கள் என்றார்.

நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நான் என் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.