ஜானி படத்தில் இடம் பெற்ற சினோரிட்டா பாடல் கம்போசிங் போது தான் யுவன் பிறந்தார்.
இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இசையமைப்பாளர் யுவன்இசை உலகின் இளவரசன் ”யுவன் ” சங்கர் ராஜா. இதனையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்சியமான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நான் அப்போது ஆழியார் அணைக்கட்டில் சென்று நிறைய படங்களுக்கு இசை கம்போசிங் செய்வது பழக்கமாக இருந்தது. அங்கு இரண்டு மூன்று நாட்கள் தங்கி நான்கு படங்களுக்கு மேல் இசை கம்போசிங் செய்ய சென்றேன். இயக்குநர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கேஆர்ஜி இருவரும் என்னை அழைத்துச் சென்றனர்.அப்போது கோவை சென்று வந்த தயாரிப்பாளர் கேஆர்ஜி உனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று என்னிடம் கூறினார்.
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் நான் ஆழியாரில் கம்போசிங்கில் இருந்தேன். குழந்தை பிறக்கும் சமயத்திலும் நான் வேலையில் இருந்தேன். அப்போது கம்போசிங் செய்யப்பட்ட பாடல்தான் ரஜினி நடித்த ஜானி படத்தில் இடம் பெற்ற சினோரிட்டா என்ற பாடல் எனவும் தெரிவித்தார். பிறகு யுவன் ஹேப்பி பர்த்டே யுவன் என்று வீடியோவில் பேசியுள்ளார்.







