திருமணம் எப்போது? நடிகர் விஷால் பதில்

திருமணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் வெளியாக உள்ள “லத்தி” திரைப்படத்தின் டிரெய்லர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று வெளியீடு செய்யப்பட்டது. பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

திருமணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் விஷால்.

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள “லத்தி” திரைப்படத்தின் டிரெய்லர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று வெளியீடு செய்யப்பட்டது. பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “முதல்முறையாக கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்துள்ளேன். விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை. பிரச்னையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும். ஓடிடியில் சின்ன படங்களை தான் வாங்குகிறார்கள். சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று பார்ப்பதற்கு தான் நாங்கள் முயற்சிகள் மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

ஓடிடி தளங்களால் சினிமா துறைக்கு பாதிப்பு வந்துள்ளது. சினிமாத் துறைக்கு ஜிஎஸ்டி விதித்தது மிக அதிகம். சூதாட்டத்தையும் சினிமா துறையும் ஒரே வகையில் வைத்துள்ளனர் என்று கூறிய விஷால், “இரண்டரை மணி நேரத்தில் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது. இரண்டரை மணி நேரத்தில் பிரச்னை தான் சொல்ல முடியும் தீர்வு சொல்ல முடியாது. ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் விவசாயிகளுக்கு நான் கொண்டு சேர்ப்பேன்” என்றார்.

திருமணம் குறித்த கேள்விக்கு கட்டிடத்திற்கு பின்பு தான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.