நடைபாதை வியாபாரி ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு வாழைப்பழம் கலந்து பானிபூரி தயார் செய்து கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்த காரமான சுவையான சிற்றுண்டியை மக்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் பானி பூரி பலரின் விருப்பமான தெரு உணவு. பானி பூரியின் பூர்வீகம் வட இந்தியா. பானி பூரியின் பின்புலம் என்னவாக இருந்தாலும் தற்போது நாடு முழுவதும் அதனை விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. அதன் அசாத்திய சுவையை நம் நாக்கறியும். தற்போது தெருவோரக் கடைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவது பானி பூரிதான்.
சிறுவர்கள் முதல் முதியோர் வரை ஆங்காங்கே விற்கப்படும் பானி பூரியை உண்டு மகிழ்கிறார்கள். அடிக்கடி பானி பூரி குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வந்தாலும், நம்மால் அச்சமயம் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிடுவோம். அந்த அளவிற்கு சாப்பாட்டு பிரியர்களிடையே வரவேற்பை பெற்ற பானி பூரி குறித்த வீடியோ ஒன்று நெட்டிசன்களை கடுப்பேற்றும் வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வயிரழகி வருகிறது.
நாம் அனைவரும் பூரிகளில் உருளைக்கிழங்கு அல்லது கொண்டைக்கடலை நிரப்பி சாப்பிடப் பழகிவிட்ட நிலையில், வாழைப்பழம் நிரப்புவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? குஜராத்தை சேர்ந்த முகம்மது பியூச்சர் வாலா என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில், நடைபாதை வியாபாரி ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு வாழைப்பழம் கலந்து பானிபூரி தயார் செய்து கொடுப்பதை காண முடிகிறது. வேக வைத்த உருளைக்கிழங்கிற்கு பதிலாக அவர் வாழைப்பழங்களை பயன்படுத்தி உள்ள நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், என்னடா இது பானிபூரிக்கு வந்த சோதனை என பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
https://twitter.com/MFuturewala/status/1671842809568202754?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








