உலகக்கோப்பை கிரிக்கெட்: அட்டவணை வெளியீடு!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐசிசி வெளியிட்டுள்ளது . உலகக் கோப்பை தொடருக்கு…

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐசிசி வெளியிட்டுள்ளது . உலகக் கோப்பை தொடருக்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க போட்டியில் அக்டோபர் 5 ஆம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை  வேறு இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான்  அணி ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை ஐசிசி  நிராகரித்தை தொடர்ந்து  இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விளையாடும் போட்டிகள்

அக்டோபர் 8 | இந்தியா – ஆஸ்திரேலியா – சென்னை
அக்டோபர் 11 | இந்தியா – ஆப்கானிஸ்தான் – டெல்லி
அக்டோபர் 15 | இந்தியா – பாகிஸ்தான் – அகமதாபாத்
அக்டோபர் 19 | இந்தியா – வங்கதேசம் – புனே
அக்டோபர் 22 | இந்தியா – நியூசிலாந்து – தர்மசாலா
அக்டோபர் 29 | இந்தியா – இங்கிலாந்து – லக்னோ
நவம்பர் 2 | இந்தியா – குவாலிபயர் 2 – மும்பை
நவம்பர் 5 | இந்தியா – தென்னாப்பிரிக்கா – கொல்கத்தா
நவம்பர் 6 | இந்தியா – குவாலிபயர் 1 – பெங்களூர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.