முக்கியச் செய்திகள் தமிழகம்

முதியவர்களை காக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? கனிமொழி என்விஎன் சோமு கேள்வி

நாடாளுமன்ற மாநிலங்களைவில் முதியவர்களை காக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடியது. அப்போது மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு, வன்முறை மற்றும் குற்ற செயல்களால் நாட்டிலுள்ள முதியவர்கள் பெரும்பகுதியினர் பாதிக்கப்படுகிறார்களா? அப்படியானால் அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் சுஷ்ரி பிரதிமா பௌமிக் அளித்துள்ள பதிலில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிக்கையின் படி நாட்டில் உள்ள முதியவர்களில் சுமார் 5.2 சதவீதம் பேர் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் கொலையான முதியவர்களின் எண்ணிக்கை 3,529. கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 2350 பேர் உயிரிழந்துள்ளனர். கொலை முயற்சிக்கு ஆளானவர்கள் 1,293 பேர். கடத்தப்பட்ட முதியோர் 123 பேர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர்கள் 197 பேர். முதியவர்கள் வசித்த வீடுகளில் நடத்த கொள்ளைகளின் எண்ணிக்கை 2,381.

மேலும், முதியவர்களுக்கு எதிராக 78,708 குற்ற செயல் வழக்ககுள் கடந்த 3 ஆண்டுகளில் பதிவாகியுள்ளது. இதில் அதிக வழக்குகள் கொரோனா காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. இந்த சம்வங்களுக்காக கைதானவர்கள் 76,394 பேர். இதில் 10 சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமலில் உள்ள பெற்றோர் மற்றும் முதியவர்கள் பராமரிப்பு மற்றும் நலன் தொடர்பான சட்டம், முதியவர்களின் உயிருக்கம், உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்வதுடன், பெற்ற பிள்ளைகளால் அவர்கள் கைவிடப்படாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பையும் வழக்குகிறது.

சமூகநீதி அமைச்சகத்தின் சார்பில், முதியோர் இல்லங்கள் நடத்த மானியம் வழங்கப்படுவதுடன் அந்த இல்லங்களில் தங்கும் முதியோருக்கு, இலவசமாக உணவு, மருந்துகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. வயது முதிர்வின் காரணமாக உடல் உபாதைகளுக்கு ஆளாகம் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள முதியவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகள், வீல் சேர், சிலிகான் மெத்தை, வாக்கிங் ஸ்டிக், காது கேட்கும் கருவி போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.
வயதானாலும் உழைக்கும் மனமும், உடல் பலமும் கொண்டவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தனி போர்ட்டல் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதியோர்கள் இணைந்து சுய உதவிக்குழுக்கள் அமைக்கவும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

முதியோர்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண 14567 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தேவையான உதவியைப் பெறலாம். இதுதவிர மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் குறைந்தது 10 படுக்ககைள் கொண்ட முதியயோருக்கான பிரத்யேக வார்டை மாவட்ட மருத்துவமனைகளில் அமைக்க ஒப்புதலும், நிதி உதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொருளாதார ஆய்வறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ன?

Lakshmanan

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் ஆவணங்கள் மாயமா ?

Web Editor

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை: 6.5 கிலோ தங்கம் சிக்கியது

EZHILARASAN D