எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக – சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




