GOLD PRICE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.245-ம் சவரனுக்கு ரூ.1,960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 140-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,160-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.205-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.