இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆக்லாந்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இதனிடையே போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெலிங்டனில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மழை நின்ற பின் போட்டி தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதனிடையே போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது..




