அண்ணாமலைக்கு வழங்கப்படவுள்ள Z பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

அண்ணாமலைக்கு எதற்காக Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது? இசட் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன? விரிவாக காணலாம். இசட் பிளஸ், இசட், எக்ஸ், ஒய், ஆகிய பிரிவுகளின் கீழ், பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.…

அண்ணாமலைக்கு எதற்காக Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது? இசட் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன? விரிவாக காணலாம்.

இசட் பிளஸ், இசட், எக்ஸ், ஒய், ஆகிய பிரிவுகளின் கீழ், பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள விவிஐபி உள்ளிட்ட தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இசட் பிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு 36 வீரர்களும், இசட் பிரிவில் உள்ளவர்களுக்கு 22 வீரர்களும் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவர். தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், டெல்லி போலீசார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் இந்த பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

இசட் பிரிவு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ள வீரர்களுக்கு நவீன ரக துப்பாக்கி, தகவல் தொடர்பு கருவிகள் ஆகியவை வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு வீரரும், ஆயுதமே இல்லாமல் அச்சுறுத்தலையும், எதிரிகளையும் சமாளிக்கும் பயிற்சி பெற்றவர்களாக இருப்பர்.

பாதுகாப்பை பொறுத்தவரை இசட் பிரிவுக்கும், இசட் பிளசுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனைப்படைகள் சகிதம் ஒரு தலைவர் வலம் வந்தால் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார் என புரிந்து கொள்ளலாம்.

ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.

எக்ஸ் பிரிவு பாதுகாப்பு பிரிவில் 2 வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். அமைச்சர்கள் அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு தரப்படும். பாதுகாப்பு படைகளிலேயே மிகவும் கடைநிலையில் உள்ள பிரிவு இது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.