“தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை ?” – உயர்நீதிமன்றம் கேள்வி

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது,

காவிரியில் தமிழகத்திற்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு அதரப்பு வழகக்றிஞர்கள், தமிழகத்துக்கு விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை என வாதிட்டனர்.

அதற்கு நீதிபதிகள், கார்நாடகம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடக நீர் திறந்துள்ளதாக கூறுகிறதே. இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரவுகள் அடிப்படையில் பார்த்தோம் என்றால் தற்போதைய நிலையில் நீர் வருவதில் பிரச்சனை இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். அப்படி இருக்கையில் நீர் வரவில்லை என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்லபடி காவிரி நீர் மேலாண்மை ஆணையமானது விகிதாச்சார அடிப்படையில் நீர் திறக்க உத்தரவிடுவதில்லை. அதனால்தான் தங்களுக்கு தற்போது நீர் பற்றாக்குறை பிரச்சனை இருந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தது. நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது அதில் நாங்கள் இந்த விவகாரத்தை வலியுறுத்துவோம் அதே வேளையில் உச்சநீதிமன்றம் ஆனது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை கர்நாடகம் திறந்து விடுவதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் கர்நாடக அணைகளில் 78 டிஎம்சி நீருக்கு மேலாக இருந்தும் உரிய நீரை தமிழகத்திற்கு வழங்க மறுத்து வருகிறார்கள் என்று வாதிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை ? என கேள்வி நீதிபதிகள் எழுப்பினர். மேலும் கூடுதலான கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் என்றும், மேலாண்மை வாரியம் அதனை பரிசீலிக்கவில்லை என்றால் மீண்டும் ஆணையத்தில் முறையிடும் படியும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த ஆக்ஸ்ட் 31-ஆம் தேதிக்க்ய் ஒத்திவைப்பத்னர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் திறக்கப்பட்ட நீர் மற்றும் பெறப்பட்ட நீரின் அளவு உள்ளிட்டவற்றை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.