ஹேக்கிங் என்றால் என்ன? ஹேக்கிங்கை தொழிலாக செய்வது சட்டவிரோதமா? என்பத்தை பற்றி இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.
“ஹேக்கிங்” சட்டவிரோதம் தான். சைபர் கிரைம் காவல்துறையினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பணத்திற்காக கூலிப்படை கொலை நடப்பது போல ஹேக்கிங் அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஹேக்கிங்கில் இணையதள ஹேக்கிங், வலையமைப்பு ஹேக்கிங், மின்னஞ்சல் ஹேக்கிங், பாஸ்வேர்ட் ஹேக்கிங், கணினி ஹேக்கிங் என பல வகைகள் உள்ளன.
அதேபோல் ஹேக்கர்களில் மூன்று வகையினர் இருக்கின்றனர். கருப்புத் தொப்பி ஹேக்கர், வெள்ளைத் தொப்பி ஹேக்கர், சாம்பல் நிறத் தொப்பி ஹேக்கர் என்று இணைய உலகில் பேசப்படுகிறது.
ஹேக்கிங்கை தொழிலாக செய்து சட்டவிரோதமாக பணம் சாம்பாதிப்பவர்களை கருப்புத் தொப்பி ஹேக்கர் என்று சொல்லப்படுகிறது. கணினி வலையமைப்பில் உள்ள பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்து, தங்களது ஹேக்கிங் திறமைகளை நல்ல நோக்கத்திலேயே பயன்படுத்துபவர்கள் வெள்ளை நிறத் தொப்பி ஹேக்கர். இவர்கள்
ஒரு போதும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் ஹேக்கிங்கை பயன்படுத்தமாட்டார்கள்.
இவர்களின் பணியயையே எதிக்கல் ஹேக்கிங் என்று இணைய ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாம்பல் நிறத் தொப்பி ஹேக்கர்ஸ் தங்களது ஹேக்கிங் திறமையை நல்ல விஷயத்திற்கும், தவறான செயலுக்கும் பயன்படுத்தவார்கள். நிறுவனத்தில் வேலை செய்யும் போது வெள்ளை நிறத் தொப்பி ஹேக்கராகவும், கருப்பு நிறத் தொப்பி ஹேக்கராகவும் “அந்நியன்” கேரக்டர் போல செயல்படுவார்கள் என்கின்றனர் சைபர் வல்லுனர்கள்.
நிதி மற்றும் தகவல்களைக் கையாளும் வங்கிகள் போன்ற பெரும் நிறுவனங்களின் கணினி வலையமைப்புக்களில் ஹேக்கர்களின் தாக்குதல்கள் பெரும் இழப்பை ஏற்படுத்தும். இது போன்ற இழப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு இந்நிறுவனங்கள் தமது கணினி வலையமைப்பிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை இல்லாமல் செய்ய ஹேக்கர்களை பணியில் அமர்த்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சைபர் வல்லுனர்கள்.







