“உணர்வற்ற தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது?” – கனிமொழி

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் இருவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது? இந்தப் படுகொலைகளைத்தான்

இந்தப் படுகொலைகளைத்தான் தவெக அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.