”முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் என்ன ஆனார்.?”- மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி!

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் என்னவானார்.? என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 அன்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது.  ராஜினாமாவிற்கு அவரின் உடல் நிலையை காரணமாக சொல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது துணை குடியரசுத் தலைவர்  தேர்தல் அவரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடை பெறும் என அறிவித்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இருவரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பு கட்சியினரையும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னாள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும்  எதிர்கட்சிகள் அவர்  எங்கே உள்ளார் என கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக மதுரை எம்.பி  சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்? எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான். தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?”

என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.