டிரினிடாட்டில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு பார்படாஸ் சென்றடைய வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்திய அணி வீரர்கள் தூக்கத்தை இழந்து, பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து ஒருநாள் தொடரின் முதல் போட்டிக்காக இந்திய அணி டிரினிடாட்டில் இருந்து பார்படாஸ் சென்றடைய இந்திய அணி தயாரிக்கியுள்ளது. அதற்காக 11 மணி விமானத்தை பிடிக்க, இந்திய அணி வீரர்கள் ஹோட்டலில் இருந்து கிளம்பி இரவு 8.40 மணிக்கு செக் அவுட் செய்ய, விமானம் நிலையம் வந்துள்ளனர். அப்போது டிரினிடாட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்டது.
இதனால் கடும் கோபமடைந்த இந்திய அணி வீரர்கள் அதுகுறித்து பிசிசிஐ உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் புகார் தெரிவித்து எழுதிய அந்த கடிதத்தில், இரவு 11 மணிக்கு வர வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாகி அதிகாலை 3 மணிக்கு வந்ததனால் மிகுந்த சிறப்பட்டோம். தூக்கமில்லாமல் போட்டியில் எவ்வாறு கலந்துகொள்வது. தூக்கமின்மையால் சரியாக பயிற்சி எடுக்க முடியவில்லை. இனிமேல் இரவில் எந்த விமானத்தையும் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தது
மட்டுமின்றி எதிர்காலப் பயணத்தில் இதுபோன்று பிரச்சனைகள் வராத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் 2 போட்டிகள் பார்படாஸில் நடைபெறும்;
இந்திய அணி பார்படாஸில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதே நேரத்தில், தொடரின் மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி மீண்டும் பார்படாஸில் இருந்து டிரினிடாட் வர வேண்டும்.
ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் நேரடியாக பார்படாஸை அடைந்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








