ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான ”ஹுக்கும் எனப்பெயரிடப்பட்ட பாடல் வெளியானது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ம் தேதி நடக்கவுள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலானது. அந்த வீடியோவில் நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்பதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.








