‘என்னத்த சொல்றது’; ‘ஜெய்பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபன் விமர்சனம்

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்…

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெய்பீம்’ படம் குறித்து ‘என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

“சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும். நிறைய காசுக்கும் நல்ல causeக்கும் ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு அதுவும் ஏற்கனவே இருண்டு கொண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் இது ஒரு கமர்சியல் என்று வண்ணம் பூசிக் கொள்ள வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்க துவங்கி கரைந்தே போனேன்.

சந்துரு சார்! இது பெயர் அல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு. அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகமாக அமர்த்தி கௌரவம் தேடி கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டு உள்ளேன். அது இன்று திரு ஞானவேல் அவர்கள் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கின்றேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடான கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்” என்று இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.