முக்கியச் செய்திகள் இந்தியா

லகிம்பூர் வன்முறை சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

லகிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாயினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ரா அந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விவசாயிகள் மீது காா் மோதுவதை உறுதிபடுத்தும் வகையில், விடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக் காக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை உத்தரபிரதேச அரசு அமைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ-யை உள்ளடக்கிய உயர்நிலை நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி 2 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த மாதம் 26 ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த சம்பவத்தில் பத்திரிகை யாளர் ரமன் காஷ்யப், பாஜக தொண்டர் ஷியாம் சுந்தர் உயிரிழந்தது குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

உலக சிறுதானிய ஆண்டாக 2023ஐ அறிவித்தது ஐ.நா!

Halley karthi

விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு!

Saravana

நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா உறுதி

Gayathri Venkatesan