கொரோனா அதிகரிக்க இதுதான் காரணம்: டெல்லி முதல்வர் புகார்

தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு 6 மாதம் தாமதமாக தொடங்கியதே, கொரோனா நோய் தொற்று அதிகரிப்பிற்கு காரணம், என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய…

தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு 6 மாதம் தாமதமாக தொடங்கியதே, கொரோனா நோய் தொற்று அதிகரிப்பிற்கு காரணம், என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யும்படி மத்திய அரசிடம் கோரியுள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். கொரோனவுக்கு எதிரான போரில் மத்திய அரசு தோற்றால் அது பா.ஜ.க.வின் தோல்வி அல்ல, அது நாட்டின் தோல்வியாகத் தான் பார்க்கப்படும் என்றார்.

அதுபோல டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் தோல்வி அடைந்தால், அதையும் நாட்டின் தோல்வியாகத் தான் பார்க்க வேண்டும் என்றார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 6 மாதத்திற்கு முன்னரே தொடங்கி இருந்தால், 2-வது உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.