முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3-ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். அதன் பிறகு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்ட ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் மாளிகை சென்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணமாக வழங்குவதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநரிடம் அளித்து ஒப்புதல் பெற்றார்.

இதனையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மூன்றாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் 3,50,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் விரைவில் இந்தப் பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். இதற்காக 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya

புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!

Karthick

10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை; சூப்பர் மார்க்கெட்டின் புதிய முயற்சி!

Jayapriya